Prinson

என்ட படிப்பு பாதியிலே நின்று போயிட்டு. குடும்பத்தின்ட சுமைய தாங்க, பித்தளை சாமான் செய்யிற இடத்துக்கு வேலைக்கு போனன். இரண்டு வருஷம் பித்தளை கைத்தொழில் பற்றி நல்லா படிச்சு எனக்கென்டு ஒரு வேலைத்தளத்தை தொடங்க நினைச்சன். ஆனா சாமான் செய்யிறதுக்கு தேவையான பித்தளை எங்க இருந்து எனக்கு கிடைக்கும்? யோசிச்சன். வீடுகள்ல பயன்படுத்தாம கிடக்கிற பழைய பித்தளை சாமான்கல சேகரிச்சு, உருக்கி, புதிய அச்சுகள்ல வார்த்து புதிய பித்தளை பொருட்கள உருவாக்குனன். இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில என்னுடைய பித்தளைச் சாமான்களுக்கு நல்ல மவுசு. நான் இப்ப பித்தளை உற்பத்திக்கு தேவையான சகல இயந்திரங்களும் இருக்கிற வேலைத்தளத்திற்கு சொந்தக்காரன். பழைய பித்தளைச் சாமான்களுக்கு புது வடிவம் கொடுத்தது போல, பலருடைய ஜீவனோபாயத்திற்கும் உதவி, அவங்கன்ட வாழ்க்கைக்கும் புது வழி காட்ட என்னால முடிந்தது.